New Updates! Fresh news just arrived.

அமெரிக்காவில் இரசாயனக் கொள்கலன் வெடிக்கும் அபாயம்: 40,00...

News

அமெரிக்காவில் இரசாயனக் கொள்கலன் வெடிக்கும் அபாயம்: 40,000 பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றம்!

May 24, 2026 11:24 pm
அமெரிக்காவில் இரசாயனக் கொள்கலன் வெடிக்கும் அபாயம்:  40,000 பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றம்!
அமெரிக்காவினுடைய கலிபோர்னியா மாநிலத்தில், விண்வெளி உற்பத்தி நிறுவனமொன்றி உள்ள இரசாயனக் கொள்கலன் ஒன்று வெடிக்கும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ள நிலையில், சுமார் 40,000 குடியிருப்புவாசிகளை அவசரமாக குறித்த இடத்தினை விட்டு வெளியேற்றயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கலிபோர்னியாவின் கார்டன் குரோவ் (Garden Grove) பகுதியில் அமைந்துள்ள விண்வெளிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள கொள்கலன் ஒன்றில், பிளாஸ்டிக் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ‘மெத்தில் மெதக்ரிலேட்’ (Methyl Methacrylate) என்ற நச்சு இரசாயனம் அதிக வெப்பமடைந்து கசியத் தொடங்கியுள்ளது.

இவ்வியந்திரத்தின் வால்வுகள் பழுதடைந்துள்ளதால் அழுத்தத்தை குறைக்க முடியாமல் தீயணைப்புப் படையினர் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்தால் கொள்கலன் வெடித்து சிதறும் அபாயம் உள்ளதால், சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், கலிபோர்னியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக மூன்று உயர்நிலைப் பள்ளிகளில் தற்காலிக தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல தங்குமிடங்கள் திறக்கப்படுவதாக மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது;

“பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மீட்பு பணிகளில் உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவவும் மாநில அமைப்புகள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன,” என ஆளுநர் கவின் நியூசம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இரசாயன தொட்டியின் வெப்பநிலை குறைந்துள்ளதாக முன்பு வெளியிடப்பட்ட தகவலை அதிகாரிகள் பின்னர் திருத்தியதுடன், நிலைமை தொடர்ந்து ஆபத்தானதாகவே இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now