New Updates! Fresh news just arrived.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாக ...

News

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாக திறக்கும் அபாயம் - விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

August 4, 2026 1:36 pm
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாக திறக்கும் அபாயம் - விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் இன்று (04) அதிகாலை மேல் கொத்மலை வான் கதவு ஒன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலையிலும் நீர்மட்ட அதிகரிப்பால் வான் கதவு திறந்து நீரை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மழை தொடருமானால் மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் , ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கும் அபாயம் உள்ளது.

இதனால், கொத்மலை அணைக்கட்டின் கீழ் உள்ள ஆற்றின் இரு மருங்கிலும் வாழும் மக்கள் தொடர்ந்தும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் தொடரும் கன மழை காரணமாக, டெவோன் மற்றும் செயின்ட் கிளேயர் போன்ற அருவிகளில் வழக்கத்திற்கு மாறாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now