கடல் கொந்தளிப்பு அதிகரிக்கும் அபாயம் – வளிமண்டலவியல் திணை...
News
கடல் கொந்தளிப்பு அதிகரிக்கும் அபாயம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாட்டின் சில கடல் பகுதிகளில் நிலவக்கூடிய பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த "மஞ்சள்" (Amber) எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான மற்றும் சிலாபம் முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள், மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் அவ்வப்போது கடலும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.