New Updates! Fresh news just arrived.

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் 30 மில்லியனில் வீதி ...

News

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் 30 மில்லியனில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

October 25, 2026 1:35 pm
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் 30 மில்லியனில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியான வொலிவேரியன் கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 30 மில்லியன் ரூபாய் செலவிலான கிராம உள்ளக வீதிகள் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினரான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினுடைய தீவிர முயற்சியால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குறித்த கிராமத்து வீதிகளினை புனரமைத்து அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தினுடைய ஆரம்ப நிகழ்வானது நேற்று (24) இடம்பெற்றது.

100 மீட்டர் நீளமுடைய 7 வீதிகள் புனரமைப்பு

குறித்த அபிவிருத்தித் திட்டத்திற்கான முதற்கட்டமாக, 100 மீட்டர் நீளத்தினை கொண்ட 7 உள்ளக வீதிகளினுடைய நிர்மாணப் பணிகள் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன.

இவ்வீதி அபிவிருத்திப் பணிகள் விரைவாக நிறைவுபெறுவதன் மூலம், நீண்டகாலமாகப் போக்குவரத்துச் சிரமங்களை எதிர்கொண்டு வந்த அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகள் வெகுவாக மேம்படுவதுடன், அவர்களின் அன்றாடப் பயணங்கள் இலகுவாகவும் பாதுகாப்பாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[அம்பாறை நிருபர் - பாறுக் ஷிஹான்]
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now