New Updates! Fresh news just arrived.

மாணவர்களுக்கான ரூ.10,000 பங்குச் சந்தை முதலீட்டு வாய்ப்பு...

News

மாணவர்களுக்கான ரூ.10,000 பங்குச் சந்தை முதலீட்டு வாய்ப்பு

November 14, 2026 11:42 am
மாணவர்களுக்கான ரூ.10,000 பங்குச் சந்தை முதலீட்டு வாய்ப்பு
2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட புதிய எண்ணக்கருவின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்குப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் நிறைவேற்று உப தலைவர் நிரோஷன் விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், மாணவர்களிடையே பங்குச் சந்தை குறித்த அடிப்படை அறிவை வளர்ப்பதும், எதிர்காலத்தில் அவர்கள் வெற்றிகரமான தொழில்முயற்சியாளர்களாக மாறுவதற்குத் தேவையான நிதி அறிவை வழங்குவதுமே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.

இதற்கமைய, 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 13ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் கொழும்பு பங்குச் சந்தையினால் அறிமுகப்படுத்தப்படும் பாடநெறியொன்றைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், அதன் பின்னர் நடைபெறும் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் முதலீட்டு வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்திற்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் கிராமப்புற மற்றும் குறைந்த வசதிகளைக் கொண்ட பாடசாலைகளின் மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

பங்குச் சந்தை குறித்த நடைமுறை அறிவை வழங்குவதன் மூலம், மாணவர்கள் எதிர்காலத்தில் தமது செல்வத்தை வளர்த்துக்கொள்ளவும், தொழில்முயற்சியாளர்களாக மாறியதன் பின்னர் கொழும்பு பங்குச் சந்தை ஊடாகத் தமது தொழிலுக்கான மூலதனத்தைத் திரட்டிக்கொள்ளவும் தேவையான அடித்தளத்தை இடுவதே இந்தத் திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now