பெண்கள் அதிகாரமளித்தலை இலக்காகக் கொண்ட திட்டத்திற்காக 200...
News
பெண்கள் அதிகாரமளித்தலை இலக்காகக் கொண்ட திட்டத்திற்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ், 'பெண்கள் அதிகாரமளித்தலை இலக்காகக் கொண்ட திட்டத்திற்காக' 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட குறித்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான பதில் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றது.
குறித்த திட்டத்தின் கீழ், முக்கியமாக நடுத்தர அளவிலான தொழில்முனைவோரான பெண்களை உயர் மட்ட தொழில்முனைவோராக மாற்றுதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல், பொது-தனியார் கூட்டாண்மைகளின் கீழ் நடுத்தர வருமானம் கொண்ட பெண்களைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துதல், வேலையில்லாத இளம் பெண்களைத் தொழில்முனைவோராக வழிநடத்துதல், பாலின அடிப்படையிலான வன்முறைக்கு உள்ளான பெண்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் உத்தியோகப்பூர்வத் திறனை மேம்படுத்துதல் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள இலங்கை பெண்கள் பணியகம், சிறப்பு கவனம் தேவைப்படும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த குழுக்களைச் சேர்ந்த பெண்களை இலக்காகக் கொண்டு, 'தொழில்முனைவு மேம்பாட்டின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல்' என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இதன்படி, 11 முக்கிய திட்டப் பகுதிகளின் கீழ் தயாரிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர செயலாக்கத் திட்டத்திற்கு இணங்க, முன்மொழியப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.