New Updates! Fresh news just arrived.

ரூ.24.8 பில்லியன் TT நிதி மோசடி: ஒருவர் கைது!

News

ரூ.24.8 பில்லியன் TT நிதி மோசடி: ஒருவர் கைது!

September 23, 2026 9:58 am
ரூ.24.8 பில்லியன் TT நிதி மோசடி: ஒருவர் கைது!
சுமார் ரூ.24.8 பில்லியன் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தை, தந்திப் பரிமாற்றம் (TT) மூலம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) கொட்டிக்காவத்தை பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2024 டிசம்பர் முதல் 2025 நவம்பர் வரையான காலப்பகுதியில் இந்தப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்படாத நிலையில், குறித்த பணம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் FCID மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now