பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூப...
News
பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு!
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து 10,000 ரூபா கொடுப்பனவை வழங்க ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 (சுமார் 192 கோடி) ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது.
இதன்படி, அனைத்து ஏற்பாடுகளும் தற்போது சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களினால் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியைப் பராமரிக்க ஒரு மாணவருக்கு 25,000 ரூபா வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதில்15,000 ரூபாவினை பொது திறைசேரியிலிருந்தும் 10,000 ரூபாவினை ஜனாதிபதி நிதியிலிருந்தும் வழங்கப்படவுள்ளது.
அதன்படி, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை, மொனராகலை மற்றும் மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்பட்ட 10,000 ரூபா தற்போது முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் மற்ற மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கும் தொடர்புடைய நிதி மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.