New Updates! Fresh news just arrived.

தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் ச.ஜோசப் விஜய்

News

தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் ச.ஜோசப் விஜய்

May 10, 2026 11:42 am
தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் ச.ஜோசப் விஜய்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தலைவர் விஜய் சற்றுமுன்னர் பதவியேற்றார்.

பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநருடன், விஜய் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் நேற்று (09) மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்ததினையடுத்து ஆட்சியமைப்பதற்கான அனுமதியை தமிழக ஆளுநர் வழங்கி இருந்தார்.

அதேநேரம் எதிர்வரும் 13 ஆம் திகதி சட்டமன்றத்தில் பெரும்பான்யை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் பதவியேற்கும் நிகழ்வானது இன்று காலை 10 மணிக்கு நேரு உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமான நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சி.ஜோசப் விஜய் எனும் நான் .... எனத் தொடங்கி முதலமைச்சராக, தமிழக ஆளுநர் அர்லேகர் முன்னிலையில் பொறுப்பேற்றார்.

விஜய்யோடு 9 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

இதன்படி, புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் ஆகியோருக்கு முக்கிய அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, விஜய்யின் பதவியேற்பு நிகழ்வில் மக்களவையினுடைய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் துறைச்சார்ந்தவர்கள் என பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வுக்கு 5000 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அவரது பதவியேற்பு நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக நிலவி வந்த திமுக மற்றும் அதிமுக ஆட்சியினை முறியடித்து புதிய கட்சியாக தமிழக வெற்றிக் கழக அரசாங்கம் அமைந்துள்ளமையானது குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now