New Updates! Fresh news just arrived.

சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!

News

சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!

November 9, 2026 11:38 am
சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!
விளையாட்டுத்துறை அமைச்சினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 55ஆவது சேர் ஜோன் டார்பட் தேசிய மட்டப் இளையோர் மெய்வல்லூனர் போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

கொழும்பு, தியகம சர்வதேச விளையாட்டு மைதானத்தில் (6) சனிக்கிழமை அன்று நடைபெற்ற இப்போட்டியில்,14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 4X100M அஞ்சல் ஒட்ட நிகழ்ச்சியில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் 51.60 சிறந்த நேரத்தில் தேசிய ரீதியில் ஓடி திறமையை வெளிக்காட்டியதால் [ Merit Award ] திறமைச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், இவ்வாரன இளையோர் தேசிய மெய்வல்லூனர் போட்டிகளில் முதல் தடவையாக
பாடசாலை மாணவர்கள் சாதனையை நிலைநாட்டியுள்ளார்கள்.

இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவனுக்கும் , இம் மாணவனுக்கு பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.அப்ராஜ் ரிலா விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.யு.எ. சம்லி வெற்றிக்காக உறுதுனையாய் இருந்து ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர் (SLEAS),
இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் எஸ்.முபாரக்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு (SDEC) மற்றும் பழைய மாணவர்கள் (OBA), பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

(எம்.என்.எம்.அப்ராஸ்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now