அக்கரைப்பற்று கல்வி வலய பதில் பணிப்பாளராக சஹுதுல் நஜீம் ந...
News
அக்கரைப்பற்று கல்வி வலய பதில் பணிப்பாளராக சஹுதுல் நஜீம் நியமனம்!
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தினுடைய பதில் வலயக் கல்விப் பணிப்பாளராக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரான எம்.எஸ். சஹுதுல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ரஹ்மத்துல்லாஹ் ஓய்வு பெற்றுச் சென்றமையினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் நேர்முகப் பரீட்சை மூலம் நியமிக்கப்படும் வரை, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்களுக்கு மேலதிக பொறுப்பாக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய நியமனம் கல்வி நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதற்கான இடைக்கால ஏற்பாடாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
நூருல் ஹுதா உமர்