சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றிய அங்கத்தவர்களுக்கான வ...
News
சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றிய அங்கத்தவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்!
சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் அங்கத்தவர்களின் நலன் கருதி ஏற்பாடு செய்த விசேட மருத்துவ முகாம் ஒன்று நேற்று (13) சனிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஒன்றியம் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்த தொற்றா நோய்க்கான ஆரோக்கிய உடல் பரிசோதனையும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கும் இந்த மருத்துவ முகாமில் நீரிழிவு, கொலஸ்ட்ரோல், பிரசர், சிறுநீரகம், கண், உடற்பருமன், சுட்டி நிறை, உயரம் என்பன பரிசோதிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பரின் நெறிப்படுத்தலில், சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் தலைவர் முன்னாள் அதிபர் கலாபூஷணம் ஏ. பீர் முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் இம்மருத்துவ முகாமில் கலந்துகொண்டு தங்கள் உடல் பரிசோதனையை மேற்கொண்டு பயன்பெற்றனர்.
இந்நிகழ்வில் சுகாதாரக் கல்வி தாதியர் அலுவலர் மதுசாலினி மற்றும் வைத்தியசாலையின் பணியாளர்கள் சிறப்பாகச் செயற்பட்டனர்.
நிகழ்வின் முடிவில் ஒன்றியத்தின் சார்பாக டாக்டர் சனூஸ் காரியப்பர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த குறுகிய கால ஏற்பாட்டைச் செய்த சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் தலைவர் முன்னாள் அதிபர் கலாபூஷணம் ஏ. பீர் முஹம்மட் மற்றும் பொதுச்செயலாளர் எம்.எம். உதுமாலெப்பை உட்பட சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் ஆகியோருக்கு ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் இதன்போது தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)