New Updates! Fresh news just arrived.

இயற்கையை பாதுகாப்பது தொடர்பில் மாணவர்களை விழிப்பூட்டும் வ...

News

இயற்கையை பாதுகாப்பது தொடர்பில் மாணவர்களை விழிப்பூட்டும் விசேட நிகழ்வு சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில்!

June 5, 2026 2:39 pm
இயற்கையை பாதுகாப்பது தொடர்பில் மாணவர்களை விழிப்பூட்டும் விசேட நிகழ்வு சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில்!
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, இயற்கையை பாதுகாப்பது தொடர்பில் மாணவர்களை விழிப்பூட்டும் விசேட நிகழ்வு சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில் இன்று (05) நடைபெற்றது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியம், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றும் தூய்மையான சூழலை உருவாக்குவதற்கான நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதி அதிபர், ஆசிரியர்கள், ஒழுக்காற்று பொறுப்பாசிரியர் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் மூலம் மாணவர்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் சிறப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now