New Updates! Fresh news just arrived.

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் மீ...

News

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் மீலாத் விழா!

August 26, 2026 11:13 pm
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் மீலாத் விழா!
பூமான் நபிகள் நாயகம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாதுன் நபி விழா - 2026 நிகழ்வானது சாய்ந்தமருது - மாளிகைக்காடு இஸ்லாமிய கலை, கலாசார விழுமியங்கள் மற்றும் மரபுகளைப் பராமரிக்கும் சபையுடன் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் இணைந்து ஏற்பாட்டில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ரபியுல் அவ்வல் (பிறை 12) இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

கடந்த 12 நாட்களாக இப்பள்ளிவாசலில் ஓதப்பட்டு வந்த சுப்ஹான மௌலீத் பாராயணம் தமாம் செய்யும் நிகழ்வு இடம் பெற்றது. இதில் உலமாக்கள் கலந்து கொண்டு மௌலீத் பாராயணத்தை தமாம் செய்து வைத்ததோடு, கந்தூரி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

சாய்ந்தமருது - மாளிகைக்காடு இஸ்லாமிய கலை, கலாசார விழுமியங்கள் மற்றும் மரபுகளைப் பராமரிக்கும் சபையுடன் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம் முபாரக் மற்றும் செயலாளர் எம்.ஐ.ஏ. அசீஸ் உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சாய்ந்தமருது மாளிகைக்காடு கலை, கலாசார விழுமியங்கள் மற்றும் மரபுகளைப் பராமரிக்கும் சபையின் தலைவர் சபான் மற்றும் செயலாளர், பொருளாளர் உட்பட அதன் அங்கத்தவர்களும் கலந்து கொண்டு, இவ்வருட மீலாத் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த நிகழ்வில், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் உட்பட சாய்ந்தமருது மாளிகைக்காடு கலை, கலாசார விழுமியங்கள் மற்றும் மரபுகளைப் பராமரிக்கும் சபையின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள், உலமாக்கள் பலரும் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம் முபாரக் அவர்களினால் உலமாக்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பாக வரவேற்கப்பட்டதோடு, அன்பளிப்புகளும் வழங்கி உலமாக்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now