New Updates! Fresh news just arrived.

வெள்ளி விழா கொண்டாடும் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி! - Gu...

News

வெள்ளி விழா கொண்டாடும் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி!

April 18, 2026 4:12 pm
வெள்ளி விழா கொண்டாடும் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி!
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் 25 ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழாக் கொண்டாட்ட நிகழ்வு வெள்ளிக்கிழமை (17 )வங்கியில் இடம் பெற்றது.

வங்கியின் முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 25 வருட வெள்ளி விழாவினை முன்னிட்டு நினைவுக் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன் வாடிக்கையாளர்களினால் சேமிப்பு வைப்புக்களும் வைக்கப்பட்டன.

வங்கியின் 25 வருட வெள்ளி விழாவினை முன்னிட்டு வாடிக்கையாளர்களினால் நேற்றைய தினம் ரூபா 3-5 மில்லியன் பணம் வைப்பிலிடப்பட்டது.

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் 25 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் நேற்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன் இதனை தொடர்ந்து பல வேலைத்திட்டங்களை வங்கியின் முன்னேற்றம் கருதி தாம் திட்டமிட்டுள்ளதாக வங்கியின் முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் இதன் போது தெரிவித்தார்.

நிகழ்வில் சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃபிக்கா, வங்கியின் ஸ்தாபக முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.றம்சான், சமுர்த்தி முகாமையாளர்களான எஸ்.றிபாயா, ஐ.எல்.எஸ் ஹிதாயா, வங்கி உதவி முகாமையாளர் எம்.யூ.ஹில்மி, வலய உதவியாளர் எம். எஸ்.எம். நௌஷாட், கட்டுப்பாட்டுச் சபை தலைவர் எம்.ஐ. ஜூனைதா உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now