New Updates! Fresh news just arrived.

அகில இலங்கை செஸ் போட்டியில் சாய்ந்தமருது மாணவி ஹஸீமா மர்ய...

News

அகில இலங்கை செஸ் போட்டியில் சாய்ந்தமருது மாணவி ஹஸீமா மர்யம் சாதனை!

October 26, 2026 4:11 pm
அகில இலங்கை செஸ் போட்டியில் சாய்ந்தமருது மாணவி ஹஸீமா மர்யம் சாதனை!
சாய்ந்தமருது கமு/கமு/ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான செஸ் சுற்றுப்போட்டியில் பங்கேற்ற மாணவி எம்.எச். ஹஸீமா மர்யம், 06 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிறப்பான வெற்றியைப் பெற்று பாடசாலைக்கும் சாய்ந்தமருது மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

2026 ஒக்டோபர் 23, 24 மற்றும் 25ஆம் திகதிகளில் அனுராதபுரம் வெலிசிங்க ஹரிச்சந்திர தேசிய பாடசாலையில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான செஸ் சுற்றுப்போட்டியிலேயே இம்மாணவி தனது திறமையை வெளிப்படுத்தி வெற்றியீட்டியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச ரீதியில் நடைபெறவுள்ள செஸ் போட்டியில் பங்கேற்பதற்கான தெரிவுப் போட்டியிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பை மாணவி பெற்றுள்ளார்.

இளம் வயதிலேயே சிந்தனைத் திறன், திட்டமிடல் மற்றும் போட்டித் திறன்களை வெளிப்படுத்தியுள்ள மாணவி ஹஸீமா மர்யத்தின் இந்த வெற்றி, பாடசாலைச் சமூகத்தினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் மற்றும் மாணவியின் பெற்றோர் ஆகியோருக்கு பாடசாலைச் சமூகம் தனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

தேசிய மட்டத்தில் தனது திறமையை நிரூபித்துள்ள மாணவி ஹஸீமா மர்யம், எதிர்வரும் சர்வதேசப் போட்டிக்கான தெரிவுப் போட்டியிலும் வெற்றிபெற்று நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெற வேண்டும் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now