தொழில் நியாய சபை தலைவர்களுக்கு சம்பள அதிகரிப்பு!
News

தொழில் நியாய சபையினுடைய தலைவர்களுக்கான வருடாந்த சம்பள அதிகரிப்பினை வழங்குவது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
நீதிச் சேவை ஆணைக்குழுவால் கடந்த 21ஆம் திகதி குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் நியாய சபையினுடைய நிலுவையிலுள்ள வழக்குகளிணைத் துரிதமாக விசாரித்து முடிப்பதே குறித்த நீதிச் சேவை ஆணைக்குழுவின் பிரதான நோக்கமாகும்.
குறித்த நோக்கத்தினை வெற்றிகொள்வதற்காக, அனைத்து விடயங்களினையும் பரிசீலித்த பின்னர், வருடாந்த சம்பள அதிகரிப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு தொழிலாளர் தீர்ப்பாயத் தலைவர்கள் நிறைவேற்ற வேண்டிய குறைந்தபட்ச கட்டளைகளின் எண்ணிக்கை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பள அதிகரிப்புக்குரிய வருடத்தில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்குகள் குறித்து அறிவிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச கட்டளைகளின் எண்ணிக்கையானது 45 ஆக இருக்க வேண்டும் எனவும் நீதிச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்தோடு, முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட வருடாந்த சம்பள அதிகரிப்புக்கான விண்ணப்பப் படிவம், சம்பள அதிகரிப்புத் திகதியில் இருந்து மூன்று மாதங்கள் முடிவடைவதற்கு முன்னர் நீதிச் சேவை ஆணைக்குழுவினுடைய செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கையின் ஊடாக நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கட்டளைகளின் எண்ணிக்கையினை அடிப்படையாகக் கொண்டு, தொழில் நியாய சபையினுடைய தலைவர்களுக்கான வருடாந்த சம்பள அதிகரிப்பை வழங்கும் நடைமுறை பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் எனவும் நீதிச் சேவை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.