சம்மாந்துறை மீன் வியாபாரிகளுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வ...
News
சம்மாந்துறை மீன் வியாபாரிகளுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு: தவிசாளர் மாஹிர் நடவடிக்கை!
சம்மாந்துறை வீதியோர மீன் வியாபாரிகளின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை பிரதேச சபை அலுவலகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, அவர்கள் தடையின்றி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு ஏற்ற நிரந்தரத் தீர்வை விரைவில் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
நிரந்தர விற்பனை இடமொன்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வியாபாரிகளுக்கு இதன் மூலம் விரைவில் தீர்வு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதேவேளை, உரிய தீர்வு வழங்கப்பட்ட பின்னரும் வீதியோரங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தவிசாளர் எச்சரித்தார்.
மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், வீதிப் போக்குவரத்தையும் பொதுமக்களின் நலன்களையும் கருத்திற்கொண்டு இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தில்சாத் பர்வீஸ்