New Updates! Fresh news just arrived.

சர்ச்சைக்குள்ளான உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு!

News

சர்ச்சைக்குள்ளான உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு!

May 16, 2026 9:39 pm
சர்ச்சைக்குள்ளான உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு!
தம்புத்தேகம களஞ்சியசாலையிலிருந்து கொண்டுவரப்பட்டு ரம்பேவ விவசாய சேவை மத்திய நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும், 2019ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட MOP உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே தெரிவித்துள்ளார்.

குறித்த உரம் பயன்பாட்டிற்கு உகந்ததா இல்லையா என்பதை மாதிரிப் பரிசோதனையின் பின்னரே கூற முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மஹ கனதராவ பிரதேசத்தில் உள்ள ரம்பேவ விவசாய சேவை அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட பண்டு காபயபுர விவசாயிகளுக்கு, கடந்த 2019ஆம் ஆண்டில் மானியமாக வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட உரத் தொகுதி ஒன்று இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக நேற்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தம்புத்தேகம களஞ்சியசாலையிலிருந்து கொண்டுவரப்பட்டு ரம்பேவ விவசாய சேவை மத்திய நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த MOP உரமானது, 2019ஆம் ஆண்டு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த மற்றும் காலாவதியான உரம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now