New Updates! Fresh news just arrived.

முன்னாள் நீதி அமைச்சரின் மகன் மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள்...

News

முன்னாள் நீதி அமைச்சரின் மகன் மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க கைது!

June 25, 2026 11:46 am
முன்னாள் நீதி அமைச்சரின் மகன் மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க கைது!
முன்னாள் நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியினுடைய தொகுதி அமைப்பாளரான சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரோடு தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினுடைய தடுப்புக் காவலில் வைக்கப்படிருந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலினுடைய தலைவரான ஹரக் கட்டா என்னும் நதுன் சிந்தக விக்ரமரத்னவை பொலிஸார் கொலை செய்வதைத் தடுப்பதற்கும், குறித்த சந்தேகநபரினுடைய தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி காலி பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையினை தவிர வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும், அத்தோடு, விசாரணை நடவடிக்கைகளிலிருந்து அவரை விடுவிப்பதற்கும் தேவையான உதவிகளினை வழங்குவதற்காக, கடந்த 2023 ஆம் ஆண்டு துபாயில் வைத்து சந்தேகநபரினுடைய மனைவியான மதுஷிகா மதுவந்தி என்பவரிடம் 50 கோடி ரூபாவினை இலஞ்சமாகக் கோரியுள்ளனர்.

பின்னர் குறித்த தொகையை 20 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டு, அதில் முற்பணமாக 12 கோடி ரூபாவினை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டதாகவும் சந்தேகநபர்களின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரான விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித நிர்மல ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினுடைய ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்டு வரும் சரித் வசந்த குமார அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினுடைய, இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தினுடைய முன்னாள் பணிப்பாளராகச் செயற்பட்ட வருஷ ஹென்னதிகே அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோரே குறித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவானது மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த சந்தேகநபர்களினை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now