இலங்கைக்கு சவுதி 50 மெற்றிக் தொன் பேரீச்சம்பழம் அன்பளிப்ப...
News
இலங்கைக்கு சவுதி 50 மெற்றிக் தொன் பேரீச்சம்பழம் அன்பளிப்பு
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கவென 50 மெற்றிக் தொன் பேரீச்சம்பழத்தை சவுதி அரேபியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான மற்றும் உதவி நிலையத்தினால் வழங்கப்பட்டுள்ள இந்த அன்பளிப்பை இலங்கைக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் வைபவம் இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் கொழும்பிலுள்ள சவுதி அரேபிய தூதகரகத்தில் நேற்று இடம்பெற்றது.
இது தொடர்பான ஆவணங்களில் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி, சமய, கலாசார பிரதியமைச்சர் முனீர் முளப்பர், மன்னர் சல்மான் மனிதாபிமான மற்றும் உதவி நிலையத்தின் பிரதிநிதி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அதனைத் தொடர்ந்து பிரதியமைச்சர் முனீர் முளப்பர், பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி சாலி, வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரிடம் தூதுவர் கஹ்தானி இந்த பேரீச்சம்பழத் தொகுதியை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
இவ்வைபவத்தில் முஸ்லிம் சமய, கலாசார திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் ஊடாக இலங்கை முஸ்லிம்களுக்கு ரமழானில் விநியோகிக்கவென சவுதி அரேபியா வருடா வருடம் பேரீச்சம்பழத்தை அன்பளிப்பாக வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.