புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று முத...
News
புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று முதல் ஆரம்பம்!
அண்மையில் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக எதிர்வருகின்ற 25 ஆம் திகதி வரைக்கும் குறித்த விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளானது முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான இந்திகா லியனகே குறிப்பிட்டார்.
இதன்படி, இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த 09 ஆம் திகதி அன்று நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றிருந்தது.
மேலும், புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளினை ஒரு மாதத்திற்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான இந்திகா லியனகே தெரிவித்துள்ளதோடு, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளினையும் செப்டெம்பர் மாதம் மூன்றாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.