புலமைப்பரிசில் - உயர்தர பரீட்சைகள் தொடர்பாக விசேட கூட்டம...
News
புலமைப்பரிசில் - உயர்தர பரீட்சைகள் தொடர்பாக விசேட கூட்டம்
நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, நடைபெறவிருக்கும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை தொடர்பான விசேட ஆலோசனைக் கூட்டம் இன்று (05) நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்திற்கு வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை முன்னிட்டு, பரீட்சைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தே இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன சுட்டிக்காட்டி இருந்தார்.
இதன்படி இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையிலே, பரீட்சைகள் மேற்படி திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.