New Updates! Fresh news just arrived.

காட்டு யானை தாக்குதலில் பாடசாலை மாணவன் காயம்!

News

காட்டு யானை தாக்குதலில் பாடசாலை மாணவன் காயம்!

October 2, 2026 7:04 pm
காட்டு யானை தாக்குதலில் பாடசாலை மாணவன் காயம்!
அம்பாறை மாவட்டம், மத்திய முகாம் 03 பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவன் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று (02) அதிகாலை சுமார் 5 மணியளவில் நற்பிட்டிமுனை கிட்டங்கி பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு பகுதியில் இருந்து மத்திய முகாம் பிரதேசத்தை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போதே குறித்த மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி உள்ளார்.

இதனையடுத்து குறித்த காயமடைந்த மாணவனை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளினை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தில்சாத் பர்வீஸ்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now