New Updates! Fresh news just arrived.

பாடசாலை மாணவி கர்ப்பம்: 55 நாட்களின் பின்னர் கைது செய்யப்...

News

பாடசாலை மாணவி கர்ப்பம்: 55 நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்!

January 25, 2026 7:42 pm
பாடசாலை மாணவி கர்ப்பம்: 55 நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்!
பாடசாலை மாணவி ஒருவரினை பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமாகிய சம்பவம் தொடர்பில் தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் 55 நாட்களின் பின்பு கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கனிஸ்ட பிரிவில் கல்வி கற்று வந்த மாணவியே குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு கல்முனையிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் குழந்தை ஒன்றிற்கு தாயாகியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியினுடைய தந்தையார் கடந்த 2025.12.01 மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய குறித்த சம்பவம் குறித்து கல்முனை தலைமையக பெண்கள், சிறுவர் பிரிவு பொலிஸார் விரிவான விசாரணைகளினை ஆரம்பித்திருந்தனர்.

இதன்படி, குறித்த முறைப்பாட்டிற்கமைய இரண்டு மாதங்களாக பாடசாலைக்கு செல்லாத நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி தொடர்பில் பாடசாலை நிர்வாகம் அம்மாணவியினுடைய தாயாரை வினவியதாகவும் உரிய பதில் கிடைக்காமையின் காரணமாகவும் தாயார் கூறிய முரண்பாடான பதில்களில் சந்தேகம் இருந்தமையினாலும் மாணவியின் தந்தை குறித்த விடயம் அறிந்து பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்திருந்தார்.

மேலும், குறித்த சம்பவத்திற்கு உடந்தையான மாணவியினுடைய தாயார் கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மாணவியின் பெற்றோர் விவாகரத்து ஆகிய நிலையில் பிரிந்து வாழ்கின்றனர்.குறித்த நிலையில் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான பாதிக்கபட்ட மாணவி அவரது தயாரினுடைய தகாத தொடர்பில் இருந்த நபரால் பாலியல் வல்லுறவிற்கு உட்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்போது குறித்த சம்பவத்தோடு தொடர்பான 45 வயதுடைய 2 பிள்ளைகளினுடைய தந்தையான பிரதான சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் 55 நாட்களிற்கு பின்னர் கல்முனை பிராந்தியத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகரான எம்.கே.இப்னு அஸாரினுடைய வழிகாட்டுதலில் கல்முனை தலைமையகத்தின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான லசந்த களுவாராய்ச்சி தலைமையில் கல்முனை தலைமையகத்தின் பெண்கள், சிறுவர் பிரிவு பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now