New Updates! Fresh news just arrived.

நுகர்வுக்கு உதவாத கோழிகளை விற்பனை செய்து மோசடி!

News

நுகர்வுக்கு உதவாத கோழிகளை விற்பனை செய்து மோசடி!

February 15, 2026 2:20 pm
நுகர்வுக்கு உதவாத கோழிகளை விற்பனை செய்து மோசடி!
பல்வேறு காரணங்களினால் உயிரிழந்த கோழிகளினை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேர் ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களிடம் இருந்த சுமார் 75 கிலோ கிராம் இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இறந்த இக்கோழிகளினை விலங்கு உணவிற்காகக் கொண்டு செல்வதாகக் கூறி, அவற்றினை மனித நுகர்விற்காக (உணவுக்காக) விற்பனை செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகக் குழுவினரினால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களினை ஆனமடுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now