மலையக மக்களுக்காக விரைவில் தனியான வீட்டுத் திட்டம்: பிரதி...
News
மலையக மக்களுக்காக விரைவில் தனியான வீட்டுத் திட்டம்: பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்!
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் தீ விபத்துகளினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நிரந்தரத் தீர்வாக, வெகு விரைவில் தனி வீட்டுத் திட்டமானநது முன்னெடுக்கப்படுமென பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சரான சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
பெல்மடுலை, தேவாலேகம கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட ரில்ஹேன தோட்டம், பாலுகம்பல பிரிவில் கடந்த 15.10.2026 அன்று இரவு 7.45 மணியளவில் தோட்டக் குடியிருப்பில் ஏற்பட்டிந்த திடீர் தீ விபத்தில் மூன்று தோட்ட வீடுகளாது சேதமடைந்துள்ளன.
குறித்த தீ விபத்தால் சேதமடைந்த குடியிருப்புகளினை பிரதி அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை (18) நேரில் சென்று பார்வையிட்டதோடு, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நிலையில் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துக்களை தெரிவித்த பிரதி அமைச்சர், குறித்த தோட்டப் பகுதியில் ஒரு வீடு முழுமையாகவும் ஏனைய இரண்டு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருப்பதாக குறிப்பிட்டார்.
அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களினுடைய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பாடசாலை மாணவர்களினுடைய கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயால் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
மேலும், பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களினையும் வழங்குவது குறித்து பிரதி அமைச்சர் என்ற ரீதியில் விசேட நடவடிக்கைகளினை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களினுடைய அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளினை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பிரதி அமைச்சர் பணிப்புரையும் விடுத்துள்ளார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தினுடைய அதிகாரிகளையும் குறித்த பகுதிக்கு அழைத்து ஆய்வுகளினை மேற்கொள்ளுமாறும், அதன் அறிக்கை கிடைத்த பின்னர் வீட்டுத் திட்டத்தினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளினை எடுக்குமாறும் பிரதி அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன்போது, தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களினுடைய குறைநிறைகளினையும் பிரதி அமைச்சர் கேட்டறிந்துகொண்டார்.