New Updates! Fresh news just arrived.

சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை!

News

சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை!

January 31, 2026 3:10 pm
சாய்ந்தமருதில் தீவிர சுகாதார பரிசோதனை!
சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ஜே. மதன் அவர்களினுடைய வழிகாட்டலில், இன்று (31) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர சுகாதார பரிசோதனை நடவடிக்கைகளானது முன்னெடுக்கப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக, சாய்ந்தமருது பிரிவுக்கு உட்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் விரிவான சுகாதார பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

பொதுமக்களினுடைய சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதோடு, உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்கும் நோக்கில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பரிசோதனைகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் இணைந்து பங்கேற்று, விற்பனை நிலையங்களினுடைய சுத்தம், உணவுப் பொருட்களினுடைய தரம், காலாவதி நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களினை ஆய்வு செய்தனர். சுகாதார விதிமுறைகளை மீறிய சில நிலையங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதோடு, எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், இதே நாளில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாவடி வீதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்களினுடைய பங்கேற்போடு, நுளம்பு களத்தடுப்பு பரிசோதனை நடவடிக்கையும் இடம்பெற்றது.

இதன் போது நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்களினை அடையாளம் காணப்பட்டு, அவற்றை அகற்றுவதற்கான அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதுடன், .இத்தகைய சுகாதார மற்றும் நுளம்பு களத்தடுப்பு பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ஜே.மதன் தெரிவித்தார்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now