New Updates! Fresh news just arrived.

கடுமையான மின்னல் தாக்கம் - 20 மாவட்டங்களுக்கு அபாய எச்சரி...

News

கடுமையான மின்னல் தாக்கம் - 20 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை

May 25, 2026 2:05 pm
கடுமையான மின்னல் தாக்கம் - 20 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இன்று (25) பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விசேட வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தலின்படி, நாட்டின் 4 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தொடர்பான 'சிவப்பு எச்சரிக்கையும்' , 16 மாவட்டங்களுக்கு 'மஞ்சள் எச்சரிக்கையும்' விடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நாட்டின் பல இடங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதுடன், பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now