பாலியல் துஷ்பிரயோக வழக்கு: அனுராதபுர அட்டமஸ்தானாதிபதி பல்...
News
பாலியல் துஷ்பிரயோக வழக்கு: அனுராதபுர அட்டமஸ்தானாதிபதி பல்லேகம தேரருக்கு பிணை!
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரரை, தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகள் மற்றும் 1 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதுடன், சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் பிணை இரத்தாகும் என நீதவான் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, பணத்திற்காக மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் தாயின் பிணைக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்து சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இவ்வழக்கை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது