பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை: பொதுச்சுகாதார பரிசோத...
News
பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை: பொதுச்சுகாதார பரிசோதகருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்னும் போர்வையில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்ற 51 வயதுடைய பொதுச்சுகாதார பரிசோதகரினை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரான அதிகாரி வாக்குமூலத்தினை வழங்குவதற்காக நேற்று (31) கல்முனைத் தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தின் நீதிவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இரு தரப்பு வாதப்பிரதிவாதங்களினையும் செவிமடுத்த நீதிவான், சந்தேகநபரினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரைக்கும் 3 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.
இதன்படி, குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கான வழக்கமான சுகாதாரப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பரிசோதனையில் ஈடுபட்ட அதிகாரி தமக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாலியல் தொல்லையானது கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பெற்றோர் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதத்தினை பாடசாலை அதிபரின் ஊடாகக் கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர். அம்மாணவர்களினுடைய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளினை அடுத்தே குறித்த அதிரடிக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பாறுக் ஷிஹான்