New Updates! Fresh news just arrived.

ஷானி மற்றும் ரவியின் அடிப்படை உரிமை மனு விசாரணை நிறைவு: த...

News

ஷானி மற்றும் ரவியின் அடிப்படை உரிமை மனு விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

April 28, 2026 5:18 pm
ஷானி மற்றும் ரவியின் அடிப்படை உரிமை மனு விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்திவைப்பு!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தங்களை சட்டவிரோதமான முறையில் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவின் விசாரணையை நிறைவு செய்துள்ள உயர்நீதிமன்றம் இதற்கான தீர்ப்பை அறிவிப்பதை ஒத்திவைத்துள்ளது.

நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now