New Updates! Fresh news just arrived.

இலங்கை கடற்பரப்பில் தாக்கப்பட்ட கப்பல்; கடும் விளைவுகள் ச...

News

இலங்கை கடற்பரப்பில் தாக்கப்பட்ட கப்பல்; கடும் விளைவுகள் சந்திக்க நேரிடும் - பகிரங்கமாக எச்சரிக்கும் ஈரான்

March 5, 2026 2:50 pm
இலங்கை கடற்பரப்பில் தாக்கப்பட்ட கப்பல்; கடும் விளைவுகள் சந்திக்க நேரிடும் - பகிரங்கமாக எச்சரிக்கும் ஈரான்
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை "கடலில் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான அட்டூழியம்" என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி வர்ணித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர் தெரிவித்துள்ளதாவது,

"ஈரானியக் கரையில் இருந்து சுமார் 2,000 மைல்கள் தொலைவில், சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து அமெரிக்கா இந்த அட்டூழியத்தைச் செய்துள்ளது. இந்தியக் கடற்படையின் விருந்தினராக வந்து 130 மாலுமிகளைச் சுமந்து சென்ற 'டெனா' போர்க்கப்பல், எந்தவித எச்சரிக்கையுமின்றித் தாக்கப்பட்டது.

எனது வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அமெரிக்கா தான் ஏற்படுத்தியுள்ள இந்த முன்னுதாரணத்திற்காக வருங்காலத்தில் கசப்பான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் நவீன ரக போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட டொர்பிடோ ஏவுகணை மூலம் தாக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுவரை 87 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, 32 பேர் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய 60க்கும் மேற்பட்ட மாலுமிகளைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now