New Updates! Fresh news just arrived.

ஷிரான் பாசிக் வழக்கு ஒத்திவைப்பு!

News

ஷிரான் பாசிக் வழக்கு ஒத்திவைப்பு!

November 11, 2026 4:21 pm
ஷிரான் பாசிக் வழக்கு ஒத்திவைப்பு!
கொக்கேய்ன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை, முதற்கட்ட விசாரணைக்கு முன்னரான மாநாட்டிற்காக ஜனவரி 25ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (11) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்கிரமசேகர முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த நீதிபதி, இந்த வழக்கினை மேலதிக முதற்கட்ட விசாரணை மாநாட்டிற்காக ஜனவரி 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

1,200 கிராமிற்கும் அதிகமான கொக்கேய்ன் போதைப்பொருளை வசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை தொடர்பில் இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now