New Updates! Fresh news just arrived.

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ!

News

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ!

October 7, 2026 5:44 pm
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ!
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (07) முற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.

'சிரிலிய சவிய' அமைப்பின் மூலம் ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டி. ஸ்கேனர் (CT Scanner) இயந்திரம் ஒன்று வழங்கப்படும் எனக் கூறி, அதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து10 மில்லியன் ரூபாய் நிதியைப் பெற்றுக்கொண்டு, அக் குறிப்பிட்ட இயந்திரத்தை வழங்காமல் அந்த அரசாங்கப் பணத்தைக் குற்றவியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்தமை மூலம் ஊழல் புரிந்தமை மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now