New Updates! Fresh news just arrived.

முன் பிணை மனுவை தாக்கல் செய்த ஷிராந்தி ராஜபக்ஷ!

News

முன் பிணை மனுவை தாக்கல் செய்த ஷிராந்தி ராஜபக்ஷ!

October 5, 2026 8:42 pm
முன் பிணை மனுவை தாக்கல் செய்த ஷிராந்தி ராஜபக்ஷ!
முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்பிணை மனுவொன்றை இன்று (5) நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

தனது சட்டத்தரணிகள் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று இந்த முன் பிணை மனுவை தாக்கல் செய்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

"சிரிலிய சவிய" கணக்கு தொடர்பான விசாரணை ஒன்றிலேயே தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியே, இந்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.

வைத்திய சிகிச்சை ஒன்றை பெருவதாக கூறி ஷிராந்தி ராஜபக்ஷ அண்மையில் சிங்கப்பூர் நோக்கி நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now