New Updates! Fresh news just arrived.

நாடு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ஷ

News

நாடு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ஷ

October 6, 2026 8:38 am
நாடு திரும்பினார் ஷிராந்தி ராஜபக்ஷ
சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் முதற்பெண்மணியான ஷிராந்தி ராஜபக்ஷ, இன்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்.

இதன்படி, மருத்துவ சிகிச்சைகளுக்காக ஷிராந்தி ராஜபக்ஷ அண்மையில் சிங்கப்பூருக்கு சென்றிருந்த நிலையில் தாம் கைது செய்யப்படுவதினை தடுக்கும் உத்தரவினை பிறப்பிக்குமாறு கோரி முன்பிணை மனுவொன்றினை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

தனது சட்டத்தரணிகளின் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் அவர் குறித்த முன் பிணை மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரியவருகின்றது.

"சிரிலிய சவிய" கணக்கு தொடர்பிலான விசாரணை ஒன்றிலேயே தாம் கைது செய்யப்படுவதினை தடுக்கும் உத்தரவினை பிறப்பிக்குமாறு கோரியே, குறித்த மனுவினை அவர் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now