New Updates! Fresh news just arrived.

ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு இருதய சத்திர சிகிச்சை!

News

ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு இருதய சத்திர சிகிச்சை!

October 13, 2026 1:36 pm
ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு இருதய சத்திர சிகிச்சை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில், அனுமதித்து சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான அறிக்கைகளினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றமானது உத்தரவிட்டுள்ளது.

'சிரிலிய சவிய' (Siriliya Saviya) கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ள நிதி முறைகேட்டுக் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் முதற்பெண்மணியான ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கானது, இன்று (13) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், ஷிராந்தி ராஜபக்ஷவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.

இதன்படி, குறித்த சந்தேக நபருக்காக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, ஷிராந்தி ராஜபக்ஷ நேற்று (12) சிறைச்சாலையில் இருந்தபோது திடீர் மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையினுடைய இருதய சத்திர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

அத்தோடு, அவர் தற்போது திறந்த இதய சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவிக்கையில், சந்தேக நபரை நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையானது உண்மைதான் என்றபோதிலும் அவரை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்துவது குறித்து எந்தவொரு தகவலும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து, பகிரங்க நீதிமன்றத்தில் சிறைச்சாலை அதிகாரிகளினை அழைத்த பிரதான நீதவான், ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு இன்றைய தினம் சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றாரா என்பது தொடர்பில் விபரங்களினை உடனடியாக விசாரித்து தமக்கு அறிவிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பந்தப்பட்ட அறிக்கை கிடைக்கும் வரைக்கும் வழக்கு இன்று பிற்பகல் 2.00 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now