மீன் விற்பனையில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி மோசடி: எடையை அதிகர...
News
மீன் விற்பனையில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி மோசடி: எடையை அதிகரிக்க மணல் கலப்படம்!
சந்தைகளிலும் வீதியோரங்களிலும் மீன் விற்பனையின் போது, மீன்களினுடைய எடையைச் செயற்கையாக அதிகரிப்பதற்காகவும் அவற்றினுடைய பழமையை மறைப்பதற்காகவும் மணல் தூவி விற்கின்ற மோசடிச் செயற்பாடுகளானது இடம்பெற்று வருகின்றன.
மேற்குறித்த செயற்பாடுகளானது அம்பாறை மாவட்டத்தினுடைய பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருவதோடு, குறித்த மோசடி தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மீன்களினுடைய செதில்கள், மற்றும் வாய்களுக்குள் (Gills) நுண் மணல் அல்லது மணல் தூள்களை புகுத்துவதின் ஊடாக மீனினுடைய நிகர எடை செயற்கையாக அதிகமாக்கப்படுகின்றது. இதன் ஊடாக நுகர்வோர் குறைந்த அளவு மீனுக்கு அதிகமான பணமானது செலுத்தி ஏமாற்றப்படுகின்றனர்.
அத்தோடு, நாள்பட்ட மீன்களினுடைய வழுவழுப்புத் தன்மையினையும், அவை அழுகும் போது ஏற்படும் வெளிப்புற மாற்றங்களினையும் மறைத்து, புதிய மீன் போன்ற தோற்றத்தினை ஏற்படுத்தவே இத்தகைய ஏமாற்று வேலைகளில் சில வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகவே, சந்தைகளில் மீன்களை கொள்வனவு செய்கின்ற போது நுகர்வோர் மிகவும் விழிப்புணர்வோடு செயற்படுவதானது அவசியமென்றும், இவ்வாறான மணல் கலப்படட அல்லது ஏமாற்று வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் தொடர்பில் அருகிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகத்திற்கோ அல்லது நுகர்வோர் அதிகாரசபைக்கோ உடனடியாக முறைப்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், புதிய மீன்களினுடைய செவுள்கள் அடர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் எனவும் செதில்களுக்குள் மணலோ, சேறோ அல்லது கறை படிந்த திரவங்களோ அடைபட்டிருக்கக் கூடாது என்றும் மீனினுடைய கண்கள் தெளிவாக, பிரகாசமாக மற்றும் வெளிப்புறமாக உப்பிக் காணப்பட வேண்டும்.
அத்தோடு, கண்கள் குழிவிழுந்தோ, மங்கியோ அல்லது இரத்தக் கறைகளோடு காணப்படுமாக இருந்தால் பழைய மீனாகும்.மீனினுடைய உடற்பகுதியை விரலால் அழுத்தினால் அது உடனே மீண்டும் பழைய நிலைக்கு மீள வேண்டும். அழுத்தும் போது குழி விழுந்து, சதைப்பகுதியானது மென்மையாகயிருந்தால் அது கெட்டுப்போன மீனாகும்.
இதேவேளை, புதிய மீனில் கடலோரத்தினுடைய இயல்பான உவர் வாசனை மட்டுமே வீச வேண்டும். துர்நாற்றமோ அல்லது மீனைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்ற அபாயகரமான 'ஃபார்மலின்' (Formalin) போன்ற இரசாயன வாசனையோ வீசக்கூடாது என்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
பாறுக் ஷிஹான்