போலிப் பிணையாளர்கள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள திடு...
News
போலிப் பிணையாளர்கள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்!
மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினுடைய முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு போலிப் பிணையாளர்கள், பல சந்தர்ப்பங்களில் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களினைப் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை, ஒரு சந்தேக நபர் 10 கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களினையும், மற்றுமொரு சந்தேக நபர் 07 கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களினையும் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் வாழைத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் தமது வசிப்பிடத்தினை உறுதிப்படுத்தி, அந்த கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களினைப் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.