வாகன பிரியர்களுக்கு அதிர்ச்சித் தகவல் - இலங்கை மத்திய வங்...
News
வாகன பிரியர்களுக்கு அதிர்ச்சித் தகவல் - இலங்கை மத்திய வங்கியின் கடுமையான உத்தரவு!
வாகனக் கொள்வனவு மற்றும் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் கடன் வசதிகளுக்கான அதிகபட்ச கடன்-மதிப்பு (LTV) விகிதங்களைக் கட்டுப்படுத்தி இலங்கை மத்திய வங்கி புதிய கடுமையான உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 105(1) ஆம் பிரிவின் கீழ், மக்ரோப்ருடென்ஷியல் (Macroprudential) அதிகார அமைப்பாகச் செயற்பட்டு, வாகனச் சந்தைக்குள் செல்லும் கடன் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் மத்திய வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த உத்தரவானது உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம் பெற்ற விசேட வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் (LFCs) மற்றும் பதிவுசெய்யப்பட்ட நிதிக் குத்தகை நிறுவனங்கள் (RFLEs) உள்ளிட்ட மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்பட்டு மேற்பார்வை செய்யப்படும் அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
2026 மே 25 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகளின்படி, இலங்கையில் முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்ட (Registered) வாகனங்களுக்கான நிதியுதவி, அந்த வாகனத்தின் சந்தை மதிப்பில் அதிகபட்சம் 60 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், பதிவு செய்யப்படாத வாகனங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலம் பயன்படுத்தப்பட்ட அண்மையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான அதிகபட்ச கடன்-மதிப்பு (LTV) விகிதம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வகைப்படுத்தப்பட்டுள்ள வாகன வகுப்புகளின் அடிப்படையில் இரண்டு வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இலகுரக பாரவுர்திகள், கெப் ரக வாகனங்கள் (Single Cabs) மற்றும் பெரிய போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட வர்த்தக ரீதியான வாகன வகுப்புகளுக்கு அதிகபட்சமாக 60 சதவீத கடன்-மதிப்பு (LTV) விகிதம் அனுமதிக்கப்படும்.