கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு!
News
கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு!
கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையிலுள்ள இசைக்கல்லூரி ஒன்று இயங்கும் கட்டிடத்தினை நோக்கி இன்று (25) அதிகாலை 2.35 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், குறித்த கட்டிடம் மற்றும் அதன் நுழைவாயிலை நோக்கி டி-56 ரக துப்பாக்கியினால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றிருப்பதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த கல்லூரிக்கு முன்னால் வெற்றுத் தோட்டாக்கள் காணப்படுவதாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தொலைபேசித் தகவலின் அடிப்படையில், நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் அங்கு சென்று விசாரணைகளினை ஆரம்பித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால், பின்னால் அமர்ந்திருந்தவர் திடீரென கட்டிடத்தின் நுழைவாயிலையும் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தும் காட்சிகள் அங்கிக்கும் CCTV கெமராவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், எந்த நோக்கத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது இதுவரைக்கும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.