New Updates! Fresh news just arrived.

சற்றுமுன் யோஷித ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால...

News

சற்றுமுன் யோஷித ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது

June 17, 2026 12:23 pm
சற்றுமுன் யோஷித ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை ஒன்றில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியிருந்த நிலையில், அங்கு வைத்தே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் சட்டரீதியான காரணங்களை முன்வைத்து அவர் முன்னிலையாக முடியாது என கடிதம் மூலம் அறிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து இன்று விசாரணைக்கு முன்னிலையாகிய போது, சம்பவ இடத்திலேயே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now