New Updates! Fresh news just arrived.

சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து!

News

சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து!

January 29, 2026 7:41 pm
சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தினை அதிகரிப்பது குறித்து ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கையானது நாளை (30) இடம்பெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களோடு இவ்வாறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பிக்கும் போது, ஜனாதிபதியால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தினை 1,750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அடிப்படைச் சம்பளத்தினை 1,350 ரூபாவில் இருந்து 1,550 ரூபாவாக 200 ரூபாய் அதிகரிப்பதற்கும், வருகைக்கான கொடுப்பனவாக 200 ரூபாவை அரசாங்கம் செலுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சம்பளத்திற்காக வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now