சமிக்ஞை கட்டமைப்பில் கோளாறு - ரயில் போக்குவரத்து தாமதம் -...
News
சமிக்ஞை கட்டமைப்பில் கோளாறு - ரயில் போக்குவரத்து தாமதம்
கொழும்பு மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அனைத்து வழித்தடங்களிலுமான ரயில் சேவைகள் பெரும் தாமதத்துடன் இயங்கி வருகின்றன.
இன்று (6) பிற்பகல் பெய்த கனமழை காரணமாகவே இந்த திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அனைத்து ரயில் மார்க்கங்களிலும் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, கொழும்பில் பெய்து வரும் பலத்த மழை காரணமாகச் சில பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், நகரின் பல வீதிகளில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.