சினோபெக், லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு! - ...
News
சினோபெக், லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளினை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் (Sinopec) நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளினை அதிகரித்துள்ளது.
இதன்படி, சினோபெக் நிறுவனத்தினுடைய ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீற்றரினுடைய விலை 122 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலையாக 487 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலையினை 219 ரூபாவினால் அதிகரிக்க குறித்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அதன் புதிய விலை 572 ரூபாவாகும்.
இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினுடைய எரிபொருள் விலைகளுக்கு நிகராகத் தனது எரிபொருள் விலைகளினை அதிகரித்துள்ளது.
நேற்று (21) நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினுடைய எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டு, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரினுடைய விலை 79 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதனுடைய புதிய விலையாக 382 ரூபாவாகவும், லங்கா சுப்பர் டீசல் ஒரு லீற்றரினுடைய விலை 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதனுடைய புதிய விலையாக 443 ரூபாவாகவும் மாற்றமடைந்துள்ளது.
அத்துடன், ஒக்டேன் 95 வகை பெற்றோல் ஒரு லீற்றரினுடைய விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதனுடைய புதிய விலையாக 455 ரூபாவாகவும், ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரினுடைய விலை 81 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதனுடைய புதிய விலையாக 398 ரூபாவாகவும் காணப்படுகின்றது. மேலும், லங்கா மண்ணெண்ணெய் விலை 60 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அதனுடைய புதிய விலையாக 255 ரூபா எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.