நாவிதன்வெளி அஸ்-சிராஜ் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர...
News
நாவிதன்வெளி அஸ்-சிராஜ் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக எஸ்.எம். சுஜான் பொறுப்பேற்பு!
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி கோட்ட சாளம்பைக்கேணி அஸ்-சிராஜ் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக அதிபர் தர உத்தியோகத்தர் எஸ்.எம். சுஜான் அவர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
அட்டாளைச்சேனை இக்ரா வித்தியாலயத்தில் குறுகிய காலம் அதிபராகவும், சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் நீண்டகாலம் பிரதி அதிபராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் எஸ்.எம். சுஜான் அவர்கள். கல்வித் துறையில் பெற்றுள்ள விரிவான அனுபவம் மற்றும் நிர்வாகத் திறமையால் இவர் இந்தப் புதிய பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாவிதன்வெளி அஸ்-சிராஜ் மகா வித்தியாலயத்தின் பதில் அதிபராக இதுவரை கடமையாற்றி வந்த மௌலவி வை.வி.ஏ. சுல்தான் அவர்களிடமிருந்து, உத்தியோகபூர்வமாகப் பொறுப்புகள் கையேற்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு, புதிய அதிபருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். புதிய அதிபர் எஸ்.எம். சுஜான் அவர்கள் தனது கடமைகளை திறம்பட நிறைவேற்றி, பாடசாலையின் கல்வி மற்றும் ஒழுங்கு முன்னேற்றத்திற்கு புதிய மாற்றங்களை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நூருல் ஹுதா உமர்