ரஷ்யாவில் பனிச்சரிவு: 11 மலையேற்ற வீரர்கள் பலி!
News

ரஷ்யாவின் வட காகசஸ் பகுதியில் உள்ள மிஷிர்ஹி மலையில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையில் ஏறிக்கொண்டிருந்த 33 பேர் கொண்ட குழுவினரை பனிச்சரிவு எதிர்பாராதவிதமாக தாக்கியுள்ளது. இந்த அனர்த்தத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், மேலும் 6 பேர் தொடர்பில் இதுவரை தகவல் கிடைக்கவில்லை என அவசரகால மீட்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பனிச்சரிவில் சிக்கியவர்களில் 16 பேர் மீட்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மீட்புப் பணிகளுக்காக 50-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்களும் ஹெலிகொப்டர்களும் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. எனினும், அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் மேலும் பனிச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் கடினமான சூழ்நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன.
இச்சம்பவம் தொடர்பான காரணங்களை கண்டறியும் விசாரணைகளை ரஷ்ய விசாரணை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.