கல்முனை ஆதார வைத்தியசாலையின் சீருடை விவகாரத்திற்கு தீர்வு...
News
கல்முனை ஆதார வைத்தியசாலையின் சீருடை விவகாரத்திற்கு தீர்வு!
அம்பாறை, கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பில் ஏற்பட்டிருந்த சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 06ஆம் திகதி கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிதாக 37 சுகாதார உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 9 பேர் இஸ்லாமிய பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் சீருடை தொடர்பான பிரச்சினை குறித்து சுகாதார அமைச்சு தற்போது தீர்மானம் ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி, குறித்த 9 பெண் சுகாதார உதவியாளர்களையும் அருகிலுள்ள கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்ய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ ஆவணம் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் நாளை தற்போதைய வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சீருடை தொடர்பாக நீடித்து வந்த பிரச்சினை முடிவுக்கு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியசாலை குழுவின் தலைவர் சந்திரசேகரம் ராஜனும் இடமாற்றத்திற்கான கடிதம் சுகாதார அமைச்சிடமிருந்து கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
9 பெண் சுகாதார உதவியாளர்களும் நாளை விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவிந்திரன் கோடீஸ்வரன், ஏ. ஆதம்பாவா உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வைத்தியசாலை குழுவின் சார்பில் நன்றியைத் தெரிவித்தார்.