New Updates! Fresh news just arrived.

இலங்கை கிரிக்கெட் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்ப...

News

இலங்கை கிரிக்கெட் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரண்!

November 12, 2026 2:49 pm
இலங்கை கிரிக்கெட் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரண்!
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட 'இலங்கைக் கிரிக்கெட்' எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகிறேன்.

சட்டமூலத்தின் 29 ஆம் வாசகம் அரசியலமைப்பின் 14(1)(இ) ஆம் உறுப்புரையை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே செல்லுபடியாகும் வகையில் நிறைவேற்றப்பட முடியும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும்இ குழுநிலைப் பரிசீலனையின் போது உயர் நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுவதன் மூலம் மேற்படி முரண்பாடு நீங்குவதுடன் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்.

மேலும், சட்டமூலத்தின் 7(1) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையை மீறுவதாகவும் அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே செல்லுபடியாகும் வகையில் நிறைவேற்றப்படலாம் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும்இ குழுநிலைப் பரிசீலனையின்போது உயர் நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுவதன் மூலம் மேற்படி முரண்பாடு நீங்குவதுடன் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்.

மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு உட்பட்டு சட்டமூலத்தின் ஏனைய ஏற்பாடுகள் எவையும் அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரண்படவில்லை என உயர் நீதிமன்றம் மேலும் தீர்மானித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு இன்றைய கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென நான் கட்டளையிடுகின்றேன் என தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now